‘சர்கார்’ திரைப்படத்தின் கதை இதுதான்?
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பல சாதனைகளைப் படைத்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் என பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சர்கார்‘. இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகின்றது.
இந்தநிலையில் ‘சர்கார’ டீசர் வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் இரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச்செய்துள்ளது.
இதற்கிடையே இந்த திரைப்படத்தின் கதைக்கு ஒருவர் உரிமை கொண்டாடி வருகின்றார். ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், இந்த நிலையில் இது தான் சர்கார் படத்தின் கதை என்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றுது.
மேலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்ற கதையில் அமெரிக்காவில் வசிக்கும் பெரிய தொழிலதிபரான விஜய் பல்வேறு நாடுகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றார். தமிழரான அவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருக்கின்றது.
சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னை வருகிறார். வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டை பதிவு செய்ய முற்படும்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது அதாவது, வாக்குச்சாவடியில் இருப்பவர்கள் அவரது ஓட்டு ஏற்கனவே பதிவாகி விட்டது என்று தெரிவித்தனர்.
இந்தநிலையில் தோல்வியையே சந்திக்காத விஜய்க்கு முதல் முறையாக அவமானம் ஏற்படுகின்றது. தேர்தல் முறைகேடுகளை பார்த்து கொதித்து அரசியல்வாதிகளான ராதாரவி, வரலட்சுமி ஆகியோருடன் மோதுகின்றார்.
இதற்காக இளைஞர்களை திரட்டுகின்றார். பணம் வாங்காமல் வாக்களிக்கும்படியும் படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் பிரசாரம் செய்கின்றார்.
பணம்கொடுத்து வாக்காளர்களை வளைக்க அரசியல்வாதிகள் கண்டெய்னர்களில் பணத்தை இறக்குகின்றனர். அதை தடுக்கும் விஜய்யை தீர்த்து கட்ட வில்லன்களை அனுப்பகின்றனர்.
மேலும், விஜய் அதையெல்லாம் எதிர்கொண்டு நேர்மையாக தேர்தல் நடத்தி நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க வைத்து நாட்டை எப்படி சீரமைக்குகின்றார் என்பது தான் ‘சர்கார்’ திரைப்படத்தின் கதையாகும். இதுதான் ‘சர்கார்’ திரைப்படத்தின் கதை என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
மேலும், ‘சர்கார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது திரைப்படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை என்று விஜய் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.