ஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்!

ஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்!

ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி மாடல்களான, மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் தொலைபேசிகளை லண்டனில் அறிமுகம் செய்துள்ளது.

இத்தொலைபேசிகள் மக்களை கவரக்கூடிய வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் ஹூவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்களாக, 6.39 இன்ச் 3120 x1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 டிஸ்ப்ளே, ஹூவாய் கிரின் 980 பிராசஸர், 720 MHz ARM மாலி- G76MP10 GPU, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0, 40 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2, 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 24 எம்.பி. பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D ஃபேஸ் அன்லாக், இரண்டு ஸ்பீக்கர்கள், இரண்டு 4ஜி வோல்ட்,வைபை, ப்ளூடூத், 4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும்.

இதேபோன்று ஹூவாய் மேட் 20யின் சிறப்பம்சங்களாக, 6.53 இன்ச் 2244 x 1080 பிக்சல் FHD+ OLED 18:7:9 டிஸ்ப்ளே, ஹூவாய் கிரின் 980 பிராசஸர், 720 MHz ARM மாலி- G76MP10 GPU,4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0,12 எம்.பி. பிரைமரி கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 24 எம்.பி. பிரைமரி கேமரா, கைரேகை சென்சார், இரண்டு ஸ்பீக்கர்கள், இரண்டு 4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி ஆகியவையே இதன் சிறப்பம்சங்களாகும்.

குறித்த இரண்டு ஸ்மார்ட் தொலைபேசிகளும் லண்டன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 5049 Mukadu · All rights reserved · designed by Speed IT net