அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கு ரஜினி நடவடிக்கை!

அரசியல் கட்சியை ஆரம்பிப்பதற்கு ரஜினி நடவடிக்கை!

அரசியல் கட்சியை ஆரம்பிப்பது குறித்து தனது மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை கூட்டமொன்றை நடத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடல் சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கட்சியின் கொடி, சின்னம், கொள்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் இவ்விடயம் தொடர்பாக ரஜினிகாந்த் மக்கள் மன்ற மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, “கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி அரசியலுக்கு வருவது தொடர்பாக ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னரே கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கட்சி தொடர்பாக விரைவாக அறிவிப்பேன் என ரஜினி கூறியுள்ளமையால் அவரது ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net