சிறிலங்கா இராணுவத்தினரின் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான நகுலன் இன்று தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகுலன் என அழைக்கப்படும், கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி இன்று காலை, கோப்பாய் தெற்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து, சிவிலுடையில் சென்ற தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்து கொண்டு செல்லப்பட்டார்.
விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த நகுலன், இறுதிக்கட்டப் போரின் போது, அம்பாறை மாவட்டத்தில், புலிகளின் தளபதிகளில் ஒருவரான ராமுடன் இணைந்து செயற்பட்டவர்.
புலிகளின் முன்னாள் தளபதி ராம் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், நகுலனும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
போர் முடிவுக்கு வந்த பின்னர், இவர்கள், சிறிலங்கா படையினரால் பிடிக்கப்பட்டு, புனர்வாழ்வு அளிக்கப்பட்ட பின்னர், 2013ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.
அதன் பின்னர் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையிலேயே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதினப்பலகை