யாழில் 200 வயதான பாரிய மரத்தை வேரோடு சாய்த்த புயல்!

யாழில் 200 வயதான பாரிய மரத்தை வேரோடு சாய்த்த புயல்!

யாழ்ப்பாணத்தில் நேற்று பெய்த கடும் மழை மற்றும் புயல் காற்று காரணமாக 200 வருடங்கள் பழமையான பாரிய மலை வேம்பு மரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது.

யாழ். பழைய பூங்கா வீதியில் உள்ள வடமாகாண மின்சாரசபை காரியாலயம் முன்பாக நின்றிருந்த மரமே சரிந்து விழுந்துள்ளது.

இதனால் யாழ். மாவட்ட செயலகத்தை அண்மித்த வீதிகள் ஊடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, யாழ். மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும், சுகாதார ஊழியர்களும் இணைந்து குறித்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 8145 Mukadu · All rights reserved · designed by Speed IT net