5 வருடங்களாக பிக்பொக்கெட் அடித்து ஆடம்பரமாக வாழ்ந்த பெண்!
5 வருடங்களாக பிக்பொக்கெட் அடித்து ஆடம்பரமாக வாழ்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண், கோவை உக்கடத்தில் இருந்து வடகோவை சென்ற பேருந்தில் ஒரு பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்தபோது தனிப்படை பொலிஸார், அவரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர்.
இவர் கடந்த 5 ஆண்டுகளாக பேருந்துகளில் கூட்டநெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடம் நகை, பணம், கைத்தொலைபேசிகளை பிக்பாக்கெட் அடித்ததுள்ளமை தெரியவந்தது.
பயணிகளுக்கு தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால், அடிக்கடி அழகு நிலையத்துக்கு சென்று முடியழகை மாற்றி, சிகை அலங்காரம் செய்துள்ளார். திருடிய பணத்தில் மளிகை கடை ஒன்றையும் நடாத்தி வந்துள்ளார்.
சுய உதவி குழு தலைவியாகச் செயற்பட்ட இவர் வங்கியில் இருந்து இலட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பொலிஸாரிடம் சிக்கிக்கொண்டார்.
சுய உதவி குழு மூலம் வாங்கிய கடனை அடைப்பதற்காக இவ்வாறு பிக்பொக்கெட் அடித்ததாக இப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.