827 ஆபாச இணையத்தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு!

827 ஆபாச இணையத்தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு!

827 ஆபாச இணையத்தங்களை முடக்குமாறு இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கமையவே மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது.

உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி பாலியல் உள்ளடக்கங்களைக் கொண்ட 857 ஆபாச இணையத்தளங்களை முடக்குமாறு உத்தரவிட்டது.

இதனையடுத்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆய்வை மேற்கொண்டது.

இதன்படி 30 இணையதளங்களில் பாலியல் தொடர்பான உள்ளடக்கங்கள் இல்லை என்பதை கண்டறிந்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப் பட்டியலில் உள்ள எஞ்சிய 827 இணையத்தளங்களை முடக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே இணையத்தளச் சேவை வழங்க உரிமம் பெற்றுள்ள நிறுவனங்கள், உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற உத்தரவில் பட்டியலிடப்பட்டுள்ள 827 இணையதளங்களை முடக்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Copyright © 2036 Mukadu · All rights reserved · designed by Speed IT net