கண்ணன் கோவிலில் நிதி மோசடிகுற்றச்சாட்டு ஒரு மாத்திற்குள் பதிலளிக்க வேண்டும்!

கண்ணன் கோவிலில் நிதி மோசடிகுற்றச்சாட்டு ஒரு மாத்திற்குள் பதிலளிக்க வேண்டும் கரைச்சி உதவி பிரதேச செயலர் தமிழினி

கிளிநொச்சி கண்ணன் கோவிலில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் எழுப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஒரு மாதத்திற்குள் பழைய நிர்வாகம் பதிலளிக்க வேண்டும், அத்தோடு மாவட்டச் செயலக உள்ளக கணக்காய்வுக்கும் உட்படுத்தப்படும் எனவும் கரைச்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சண்முகலிங்கம் தமிழினி தெரிவித்துள்ளார்.

இன்று 26-10-2018 கிளிநொச்சி கண்ணன் கோவில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. இதன் போது நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நிர்வாகத்தின் மீது கணக்கறிக்கையினை ஆதரமாக கொண்டு உறுப்பினர்கள் நிதி மோசடிக் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இதன் போது நிர்வாகத்திற்கு எதிராக 16 க்கு மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கணக்கறிக்கையின் படி 15 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதி மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே இது தொடர்பில் பதிலளிக்க விரும்புகின்றீர்களா என இதுவரை காலமும் செயற்பட்டு வந்த நிர்வாகத்திடம் உதவி பிரதேச செயலாளர் கோரிய போது அவர்கள் இல்லை எனவும் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த கரைச்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சண்முகம் தமிழினி

கணக்கறிக்கை தொடர்பில் எழுப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒரு மாத்திற்குள் உரிய பதிலளிக்க வேண்டும் என்பதோடு, குறித்த கணக்கறிக்கை மாவட்டச் செயலகத்தின் உள்ளக கணக்காய்வாளர்கள் மூலம் கணக்காய்வும் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து புதிய நிர்வாகத் தெரிவுக்கு பழைய நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதும் பெரும்பான்மையபாக பொதுச்சபை ஆதரவு தெரிவித்தமையால் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

பல வருடங்களுக்கு பின்னர் கிளிநொச்சி கண்ணன் கோவில் நிர்வாகம் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 0233 Mukadu · All rights reserved · designed by Speed IT net