மகிந்தவிற்கு டக்ளஸ் மற்றும் தொண்டமான் ஆதரவு!
பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு ஈ.பி.டி.பி இன் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இ.தொ.கா வின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டிருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் பிரதமராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் ஏற்கனவே அரசாங்கத்தில் இருந்த இரண்டு முஸ்லிம் கட்சிகள் மகிந்தவிற்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.