விக்கியின் கருத்துக்களுக்கு பதில் கூறினால் எனக்குப் பைத்தியம்!
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் கருத்துக்களுக்கு பதில் கூறினால் தனக்குப் பைத்தியம் என வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடியிலுள்ள மாகாண பேரவைச் செயலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற ஊடவியியலாளர் சந்திப்பின் போதே சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன் போது மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ விக்கினேஸ்வரன் கட்சி ஆரம்பித்துள்ளமை தொடர்பிலும் தன்னுடைய கட்சியின் கொள்கைகைய ஏற்றால் தமிழரசுக் கட்சியும் வந்து தன்னுடைய கட்சியில் இணையலாமென முதலமைச்சர் தெரிவித்துள்ளமை தொடர்பில் ஊடகவியிலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்குப் பதிலளித்த சிவஞானம் இங்கு தற்பொது இரண்டு கட்சிகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
அக் கட்சிகள் ஆரம்பிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பிற விடயங்கள் தொடர்பில் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை விக்கினேஸ்வரன் புதிய கட்சியொன்றை ஆரம்பித்து அக்கட்சியின் கொள்கைகயை ஏற்றால் தமிழரசுக் கட்சியும் வந்தும் இணையலாமென்று கூறியிருக்கின்ற கருத்து தொடர்பில் நான் பதில் கூறினால் எனக்கு மண்டைப் பிழை தான்.
மேலும் அவர் புதிய கட்சி ஆரம்பிப்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றா என ஊடகவியியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் தன் முன்னாள் நான்கு தெரிவுகள் இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
அதில் ஒன்றை அவர் செய்வார் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டிருந்தது என்கு குறிப்பிட்ட சிவஞானம் அதில் ஒன்றைத் தெரிவு செய்வது அல்லது கட்சியை ஆரம்பிப்து அவரது சுதந்திரம் என்றும் பதிலளித்துள்ளார்.
இதேவேளை வடக்கு மாகாண சபையின் ஆட்சிக் காலம் முடிவடைந்த பின்னர் ஆளுநர் மாகாண ஆட்சியை மேற்கொள்கின்ற போது,
உங்களுடன் கலந்துரையாடப்பட்டதா அல்லது இணைந்தா செயற்படுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய போது இன்றைய சூழ் நிலையில் ஆளுநர் கூட்டங்களைக் கூட்டுகின்றார்.
ஆனால் அது தொடர்பில் இதுவரை தெரிவிக்கப்படவோ அல்லது அழைக்கப்படவோ இல்லை.
ஆனால் இணைந்து செயற்படுவது தான் பொருத்தமானதாக இருக்குமென்று நம்புகின்றேன்.
அவ்வாறு நடக்கமென்றும் நம்புகின்றேன். ஆளுநர் நிர்வாகம் ஜனநாயகக் கட்மைப்பு ஆட்சிக்கு மாற்றீடு அல்ல. ஆகவே சேர்ந்து இணங்கிச் செயற்படுவார் என்றே எதிர்பார்க்கின்றோம் என்றார்.