பிரேசிலின் ஜனாதிபதித்தேர்தல் இன்று!
பிரேசிலின் அடுத்த ஜனாதிபதியைத் தேர்வுசெய்யும் வாக்கெடுப்பானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.
தேர்தல் பிரசாரக்காலங்களில் கொடிய வன்முறைகளையும் பாரிய சிக்கல்களையும் தாண்டி வந்துள்ள பிரேசிலிய வேட்பாளர்களும் பொது மக்களும் இன்று அதற்கான பிரதிபலிப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.
குறித்த தேர்தலில், வலதுசாரி காங்ரஸ் கட்சியில் ஜெயிர் பொல்சொகரோ, சயோ பவுளோ மாநிலத்தின் முன்னாள் மேயர் ஃபெனான்டோ ஹெடாட் இடதுசாரிக்கட்சியிலிருந்தும் போட்டியிடுகின்றனர்.
பாதுகாப்பற்ற நிலவரங்கள், ஊழல், லஞ்சம் போன்றவற்றால் அதிக பொருளாதார வீழ்ச்சிக்குள் சிக்குண்டுள்ள பிரேசிலில், 56 சதவீத பெரும்பாண்மை வாக்குகளைப் பெற்று வலதுசாரி வேட்பாளர் ஜெயிர் பொல்சொகரோ வெல்வாரென அந்நாடும் உலக நாடுகளும் எதிர்பார்க்கின்றன.
எனினும், ஜெயிர் பொல்சொகரோ, பிரேசிலின் டொனால்ட் ட்ரம்ப் என வர்ணிக்கப்படுபவராவார். பெண்கள், மாற்றுப்பால், ஓரினக்கவர்ச்சி, கறுப்பினம், பழங்குடி மக்கள் போன்ற வர்க்கக்குழுக்களை மிக இழிவாக நோக்குபவரென்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலின் புதிய ஜனாதிபதியைத்தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் உலக நாடுகளும் அதிக கவனஞ் செலுத்திவருகின்றன.