மன்னாரில் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கான விசேட கூட்டம்!
மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்றாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது விடுவிக்கப்பட்ட காணிகள் தவிர்ந்த விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
குறிப்பாக மன்னார் நகர நுழைவாயிலில் இராணுவ வசம் காணப்பட்ட கூட்டுறவு சங்கத்திற்கான கட்டிடம் காணப்பட்ட இடம் எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுறவு திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்க ஆளுநரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.