பயங்கரவாதச் சட்டம் இருந்து கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் எவரும் கைது செய்யப்படுவது, தடுத்துவைப்பது, விசாரணை செய்வது என எதுவும் சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் செய்துவிட முடியும்.
—————————————————
அரச தலைவர்கள் தமிழ் பகுதிக்கு வந்து தமது அன்பு உள்ளத்தை திறந்து காட்டுவது அதனைப் புகழ்வதை தொழிலாக செய்வதற்கு தமிழ் விதேசிய அரசியல்வாதிகள் உள்ளார்கள்.
அரசிற்கு முது சொறிந்து விடுவது, அரசு கொடுக்கும் சம்பளங்களை இடைஞ்சல் இல்லாது பெறுவதற்கு என்று ஒரு கூட்டம் உள்ளது.
தேசியம் (விதேசிகள் தான்) பேசிக் கொண்டு வீரவசனம் பேசிக் கொண்டு புலம்பெயர் தமிழர்களிடம் நிதியைப் பெறுவது, திட்டங்களை நிறைவேற்ற குறிப்பிட்ட விகிதம் தருமாறு கோருவது (லட்சம்- கொமிசன்) என்று ஒரு கூட்டம் உள்ளது.
சுமி- சாம் போடும் தாளத்திற்கு பக்கவாத்தியம் போட ஒரு கூட்டம் உள்ளது.
உப்புக்கு சப்பற்ற விவாதங்களை நடத்திக் கொண்டிருக்க ஒரு கூட்டம் உள்ளது. இது தாம் தான் ஆண்டபரம்பரை பேண்ட பரம்பரை எண்டு சொல்லிக் கொள்ளிற கூட்டம்.
முக்கிய போராட்டங்கள் நடந்தால் அதில் தலையைக் காட்டி தமது இருப்பை காட்டிவிட்டுப் போகின்ற முதுகெலுப்பற்ற அரசியல் வியாதிகள்.ப
சம்பூர் பிரச்சனையில் பெரும்பான்மையான தமிழ் அரசியல்வாதிகள் இந்திய தூதரகத்தின் மனதை, இந்திய அரசின் மனதை முறிக்க விருப்பமில்லாத நிலை. மீறினால் சட்டாம்பியார் என்ற தூதரின் இடையூறுக்கு ஆளாக வேணடிய நிலை
————————————————————————-
ஊழல் வாதிகளை உருவாக்கி விடுவது அரசியல் செயற்பாடாக இருக்கின்றது. இவ்வாறு உருவாகும் ஊழல் பெருச் சாளிகளை வைத்தே. இதுதான் தமிழ் தேசத்தின் இறைமைக்காக போராடுபவர்களின் நிலை என்று எமக்கு காட்டுகின்றது. இந்த ஊழல் பெருச்சாளிகளை வைத்தே தமிழ் மக்களை அடிமைப்படுத்துகின்றது.
இந்த வெவ்வேறு போக்கைக் கொண்ட அரசியல்வாதிகளால் அலங்கரிக்கப்படுவதுதான் இன்றைய தமிழ் அரசியல்வாதிகளின் நிிலை. இவர்களின் கையாளாகத அரசியல், சுயநலப் போக்கு கொண்ட விதேசிகளைக் கொண்ட கூடாரமாக இருக்கின்ற த.தே. கூ. குறிப்பாக தமிழ் தேசத்தின் இறைமை மீதான கருத்தியலில் அக்கறையற்று உள்ளார்கள்.
இவர்களின் வெறும் வெட்டிப் பேச்சுக்களுக்கு இடையே.
படைகளின் இருப்பு, நிலஆக்கிரமிப்பு, சிங்கள- பௌத்த மயமாக்கல், இன்று பயங்கரவாத பூச்சாண்டி காட்டி கைது செய்யப்படும் முன்னைநாள் போராளிகளின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்த முடியாத கையாளாகத் தலைமைகளாக உள்ளார்கள். இந்தக் கைதுகள் பற்றி அரசு நியாயமான (போலிக்கேனும்) காரணங்களைக் கூற முற்பட்டால் முன்னாள் போராளிகளின் நடத்தை சரியில்லை- அச்சுறுத்தலுக்கு காரணமானவர்கள் என்று த.தே.கூட்டமைப்பே சொல்லிவிடும் .
இதனைத் தான் கைதிகள் விடயத்தில் த.தே. கூ அம்பலப்படுத்தியுள்ளது.
——————-
பேச்சுச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம், குடும்பத்துடன் வாழும் சுதந்திரம் போன்ற அடிப்படைச் உரிமையை உறுதிப்படுத்த ஜனநாயக சக்திகள் கோரிக்கை விடவேண்டும். சாதாரண வாழ்க்கை வாழ முற்படும் போராளிகள் மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தாதே.