4 வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கி கொன்ற தாய்!
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள சாண்ட்லர் என்ற இடத்தை சேர்ந்த 19 வயது தாய் ஒருவர் தனது 4 வயது குழந்தையை குளியல் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா பகுதியை சேர்ந்த 19 வயதான ஜென்னா போல்வெல் என்ற யுவதியே இந்த நம்பவத்தை செய்துள்ளார்.
குறித்த யுவதி புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது இடைவிடாமல் குழந்தை அழுததால் தண்ணீர் தொட்டியில் மூழ்கி தன்னுடைய குழந்தையை கொன்றுள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜென்னா போல்வெல் பொலிஸ் நிலையத்தில் சென்று வீட்டில் உறங்கி கொண்டிருந்த தனது குழந்தையை யாரோ கடத்தி சென்று விட்டார்கள் என்று அழுது கொண்டே புகார் செய்துள்ளார்.
இடையடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன்போது ஜென்னாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரிடம் தீவிரமாக விசாரனை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அவர் தனது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கி தமே கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தை ரெய்னரின் உடலை ஒரு பெரிய உறையில் அடைத்து அதை அருகில் உள்ள பூங்காவில் வீசியதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வாக்கு மூலத்தைத் தொடர்ந்து ஜென்னாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதன்போது கொலை செய்யப்பட்ட குழந்தையின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.