கிளிநொச்சியில் கெரோயினுடன் கைதானவர் பொலிஸ் காவலில் இருந்து தப்பி ஓட்டம்!
கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் கடந்த இருபத்தாறாம் திகதி ஆறு கிராம் கெ ரோயினுடன் மன்னார் விசேட ராக்ஸ் தடுப்புப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இளைஞன் ஒருவர் கடந்த 28 திகதி கிளிநொச்சிப் பொலிசாரின் காவலில் இருந்த பொழுது தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கைது செய்ய முற்றபட்ட பொழுது மன்னார்விசேட ராக்ஸ் தடுப்புப்பிரிவு குழு உப பரிசோதகர் ஒருவருக்கும் சந்தேகநபருக்கும் காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது கைதான சந்தேக நபரை விசேட குழுவினர் கிளிநொச்சி பொலிசில் பாரப்படுத்தியுள்ளனர்
சந்தேக நபருக்கு காயம் ஏற்பட்டிருந்தமையால் சந்தேகநபரை கிளிநொச்சிப் பொலிசார் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பாதுகாப்பில் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதித்திருந்த வேளை கடந்த இருபத்தெட்டாம் திகதி நான்காம் இலக்க நோயாளர் விடுதியில் இருந்து குறித்த சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்
குறித்த நேரத்தில் பாதுகாப்புக் கடமையில் இருந்த சிங்கள சாயன் ஒருவரும் தமிழ் கொஸ்தாபல் ஒருவரும் உடனடியாக பணி நீக்கப்பட்டுள்ளனர்
இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரத்ன அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது சம்பவம் உண்மையானது என உறுதிப்படுத்தியுள்ளார்
சந்தேக நபரை தேடும் பணியில் கிளிநொச்சிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது