இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!
அமெரிக்கா டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி 175 ரூபாய் 56 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி, நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை ரூபாயின் வீழ்ச்சியை தடுப்பதற்கு பிராந்திய நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கல்வி பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.