5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி!
தற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்ததாக சாம்சுங் நிறுவனமே காணப்படுகின்றது.
இந்நிறுவனமாது விரைவில் Galaxy S10 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியில் ஐந்தாம் தலைமுறை இணைய தொழில்நுட்பத்தினை பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இந்த 5G தொழில்நுட்பம் கொண்ட கைப்பேசிகள் முதன் முறையாக அமெரிக்காவில் மாத்திரமே அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கைப்பேசியின் முழுமையான சிறப்பம்சங்கள் வெளியிடப்படவில்லை.
எனினும் OLED திரையினை கொண்டதாகவும், மூன்று பிரதான கமெராக்களை கொண்டதாகவும் வடிவமைக்கப்படும் என தெரிகிறது.
தவிர திரையில் மேற்பகுதி அல்லது கீழ்ப் பகுதியில் கைவிரல் அடையாள ஸ்கானர் உள்ளடக்கப்படலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.