இத்தாலி தூதரகத்தில் மனித எச்சங்கள் கண்டெடுப்பு!
வத்திகான் நாட்டிலுள்ள இத்தாலி தூதரகத்தில் மனித எலும்புக்கூட்டின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த தூதரக வளாகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளாதாக வத்திகான் தெரிவித்துள்ளது.
விலா பொர்கீஸ் தொல்பொருட்காட்சியகத்திற்கு அருகிலுள்ள குறித்த தூதரகத்தில் நேற்று இடம்பெற்ற சுத்தீகரிப்பு செயற்பாட்டின் போதே எச்சங்கள் தென்பட்டுள்ளன.
இது, கடந்த 1983ஆம் ஆண்டு காணாமற்போன வத்திக்கான் அதிகாரியொருவரின் மகள் எமுனுவேலா ஒர்லான்டியின் எலும்பு எச்சங்களாக இருக்கலாமென அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், கண்டெடுக்கப்பட்ட எச்சங்களை தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வுக்கு உட்படுத்தி குறித்த எலும்புகளின் சொந்தக்காரருடைய வயது, பால், இறந்த திகதி போன்றவற்றைக் கண்டறியும் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக சிரேஷ்ட வழக்கறிஞர் கியூசெப்பே பிங்னடோனே தெரிவித்துள்ளார்.