ஹாலோவீன் பண்டிகையில் மோதல் – 116 பேர் கைது!
பிரான்சின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்ட ஹாலோவீன் பண்டிகையின் போது வன்முறைகள் வெடித்ததைத் தொடர்ந்து 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பரிஸ் உள்ளிட்ட இல்-து-பிரான்ஸ் மாகாணம் மற்றும் Lyon, Metz, Toulouse ஆகிய நகரங்களில் இடம்பெற்ற ஹாலோவீன் கொண்டாட்டங்களின் போது வன்முறை வெடித்ததாகவும், இதன்காரணமாக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 116 பேர் கைது செய்யப்பட்டதாகவும் உள்துறை அமைச்சர் Christophe Castaner, அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 15,000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் 82 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஹாலோவீன் ஒரு கொண்டாட்டம். வன்முறை செய்வது நகைச்சுவை இல்லை. கடந்த சில வருடங்களோடு ஒப்பிடுகையில் தேசங்கள் இம்முறை மிக குறைவு!’ என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.