ஜனாதிபதியின் உத்தரவால் விசேட செயற்குழு அமர்வுகள் ரத்து!
ஜனாதிபதியினால் அண்மையில் நாடாளுமன்றத்தின் அமர்வுகள் நிறைவுறுத்தப்பட்டதன் விளைவாக நாடாளுமன்றத்தின் விசேட செயற்குழு மற்றும் ஏனைய குழு அமர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழு, கோப் குழு மற்றும் பொது மனுக்கள் தொடர்பான செயற்குழு அமர்வுகள் என்பன இதன்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
இதுதவிர, அமைச்சரவை ஆலோசனை செயற்குழு, அரசியலமைப்பு தொடர்பாக செயற்குழு மற்றும் வரப்பிரசாதங்கள் பற்றிய செயற்குழு உள்ளிட்ட 12 குழுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் நாடாளுமன்றத்தில் புதிய ஆசன ஒதுக்கீடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நாடாளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.