கட்சி மாறுபவர்களுக்கு 48 கோடியா?
கட்சி மாறுபவர்களுக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரங்க பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடி விசாரணை நடத்தப்படும் என நாடாளுமனற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசாங்க தரப்பிற்கு மாறுவதற்காக 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (48 கோடி இலங்கை ரூபாய்) பேரம் பேசப்பட்டதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தாக வெளியான செய்திக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இவ்வாறு பணம் வழங்கப்பட்டமை தொடர்பில் எமக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படும் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உடனடி விசாரணையை நடத்துவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.