இராஜதந்திரப் போராட்டம் மிக மிக அவசியம்!
இன்று இலக்குகளை அடைவதற்கு அரசியல் மற்றும் இராஜதந்திரப் போராட்டம் மிக அவசியமா என்று நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கு வழங்கும் வாராந்த கேள்வி பதிலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
குரோதங்கள் மற்றும் கசப்பான சம்பவங்களைப் புறந்தள்ளி கொள்கை அடிப்படையில் கட்சிகள் ஒன்றுசேர்ந்து செயற்படுவது அவசியம் என்பதே தனது நிலைப்பாடு.
அனைவரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது.
ஒரே கொள்கைகள் உடைய சில கட்சிகள் தமது கட்சி நலன்கள் சார்ந்து வேற்றுமையடைய பார்க்கின்றன என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை ரீதியாக பயணிக்க விரும்பினால் கட்சிகளின் நலன்கள் பின்தள்ளப்பட வேண்டி ஏற்படும்.
தமிழ் மக்களின் போராட்டம் பெரும்பான்மை அரசியல் தரப்புக்களிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. தமிழ் மக்களின் நோக்கம் என்பது வெறும் ஆதங்க வெளிப்பாடாகவே இருந்து வந்துள்ளது.
எனவே, இன்றைய காலகட்டத்தில் இலக்குகளை அடைவதற்கு அரசியல் மற்றும் இராஜதந்திரப் போராட்டம் மிக அவசியமாக உள்ளன.
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களது போராட்டம் பற்றிய நியாயத்தையும் உண்மையையும் எடுத்துக் கூறுவதற்கும் மக்கள் போராட்டம் அவசியமாகின்றது என்றும் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.