13 பேரை கடித்துக்கொன்ற அவ்னி புலி சுட்டுக்கொலை!
13 பேரை கடித்துக்கொன்றதாக கூறப்படும் அவ்னி புலியை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
மராட்டிய மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 13 பேரை அவ்னி என்ற பெண் புலி கடித்துக்கொன்றதாக கூறப்பட்டது.
யாவாத்மல் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் மத்தியில்அச்சத்தை ஏற்படுத்திய அவ்னி புலியை கொல்ல உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இணைளத்தளம் மூலம் கோரிக்கைகள் அனுப்பிவைக்கப்பட்டது.
இதையடுத்து, அவ்னி புலியைக் கண்டதும் சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு வன விலங்கு ஆர்வலர்கள் கடுமையான எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தினர்.
எனினும், அவ்னி புலியை கண்டுபிடிக்க வனத்துறையினர உத்தவிட்டனர்.
அதி நவீன கருவிகள் மூலம் தேடும் பணி ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று இரவு யாவாத்மல் பகுதியில் தனது 10 மாதங்கள் ஆன இரண்டு குட்டிகளுடன் வலம் வந்திருந்ததநிலையில் வனத்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
அவ்னி புலி சுட்டுக்கொல்லப்பட்டதை அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடிவருளின்றார்கள்.
புலியால் கடித்துக்கொல்லப்பட்டதாக கூறப்படும் 13 பேரில் 5 பேரை அவ்னி புலியே அடித்துக்கொன்றதை டி.என்.ஏ ஆய்வு முடிவுகள்தற்போது உறுதிப்படுத்தியுள்ளன.