சீனாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 15 பேர் பலி! 44 பேர் படுகாயம்!
சீனாவில் இடம்பெற்ற கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 44 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வடமேற்கு சீனாவின் கன்சு மாகாணத்திலுள்ள அதிவேக வீதியில் 31 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதனாலேயே நேற்று(சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்களில் 10 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், விபத்து இடம்பெற்ற கன்சு மாகாணத்திலுள்ள அதிவேக வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மீட்புப்பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், குறித்த விபத்து தொடர்பில் கனரக வாகனம் ஒன்றின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.