கூட்டு எதிர்கட்சியின் நால்வருக்கு அமைச்சு பதவி?
கூட்டு எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகிய நால்வருக்கே இவ்வாறு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அமைச்சரவை நியமனங்களில் இதுவரை கூட்டு எதிர்கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.
இந்தநிலையில், அரசமைப்புக்கு அமைய மேலும் 15 அமைச்சர்களும், 24 இராஜாங்க, பிரதி அமைச்சர்களை நியமிப்பதற்கான வெற்றிடங்கள் நிலவுவதாகவும் இந்த வெற்றிடங்களுக்கே இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் இன்றைய தினம் சிலருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.