அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என ஜனாதிபதி பிடிவாதம்!
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன பிடிவாதம்பிடித்து வந்தார் என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் நடவடிக்கை எடுப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலிற்கு தனது டுவிட்டர் செய்தியில் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2015 முதல் சிறிசேன விடுதலை செய்வதற்கு பிடிவாதமாக மறுத்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகவுள்ளனர் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது இன்னொரு அரசியல்சந்தர்ப்பவாத நடவடிக்கை கபடநாடகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டால் இந்த அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டஒரேயொரு நன்மையிதுவாகவேயிருக்கும் எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.