கிராண்ட்பாஸில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்!
கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 34 வயதுடைய நபரொருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காரில் பயணித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே குறித்த நபர் காயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.