கிளிநொச்சியில் எதிர்வரும் சிறுபோக நெற் செய்கை மேலதிகமாக 12500 ஏக்கர்!
கிளிநொச்சியில் எதிர்வரும் சிறுபோக நெற் செய்கை மேலதிகமாக 12500 ஏக்கரில் செய்ய முடியும் என கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி நிலைமைகள் தொடர்பில் தொடர்புகொண்டு வினவிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்
கிளிநொச்சி இரணைமடுக் குளம் பாரிய ஓர் அபிவிருத்தியின் பின்னர் குறிப்பாக 2017,2018 காலப்பகுதியில் குளத்தின் நீர்மட்டம் முழுமையடைய வில்லை ஆனால் இம் முறை அதிகாமான மழை வீழ்ச்சி தொடர் மழை என்பவற்றால் இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் முழுமையடையும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது
இது விவசாயிகளுக்கு மட்டும் அல்ல எமது தினைகளத்திற்கும் மகிழ்ச்சியான செய்தி நீர்மட்டம் முழுமையடையும் சந்தர்ப்பத்தில் எதிர்வரும் சிறுபோகத்திற்கு வழமையான சிறுபோகக் காணிகளை விட மேலதிகமாக சுமார் 12500 ஏக்கர் காணிகளில் நெற்செய்கை செய்ய முடியும் எனத் தெரிவித்தார்
அத்துடன் இம் மாதம் தொடர் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ள நிலையில் கிளிநொச்சியில் உள்ள அனைத்துக் குளங்களும் வான் பாய்வதற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் தெரிவித்தார்