களமிறங்குகிறது சி.வி.யின் தமிழ் மக்கள் கூட்டணி!
பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி களமிறங்கவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளில் அந்தக் கட்சி ஈடுபட்டுள்ளதுடன் வேட்பாளர்களை தெரிவுசெய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது புதிய கட்சி தொடர்பில் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்கிலேயே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது திடீரென பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமையினால் இந்தத் தேர்தலில் களமிறங்குவதற்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.