தேர்தலை மையப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை.
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக மாபெரும் கூட்டணியொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் தற்போது ஈடுபட்டு வருவதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலுக்காக மாபெரும் கூட்டணி ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றோம். அதற்காக சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.