பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாதளவுக்கு நான் முட்டாள் இல்லை.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் குறித்து தெரியாதளவுக்கு நானொன்றும் முட்டாள் இல்லையென நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தொடர்பாக தனக்கு ஏதும் தெரியாதென புதியதொரு மாயையை உருவாக்கி வருகின்றனர்.
மேலும் என்னை பொறுத்தவரை எந்ததொரு விடயமும் தெரியுமென்றால் தெரியுமென கூறுவேன் தெரியாதென்றால் தெரியாதென்றே கூறுவேன். இதற்காக வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.
அந்தவகையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேர் தொடர்பில் கூறுங்களென ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தால் தெரிவித்திருப்பேன்.
ஆனால் திடீரென 7 பேர் என்றால் எந்த 7 பேரென கேள்வி எழுப்புவது இயல்பாகும்.
இதனை ஒருசிலர் உணராமல் விமர்சித்து வருகின்றனர். குறித்த 7 பேர் தொடர்பில் தெரியாதளவுக்கு நான் முட்டாள் இல்லை.
மேலும் அவர்கள் பிணையில் விடுதலையாகி வெளியில் வந்தபோது, 10 நிமிடங்களுக்கு மேல் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்தி ஆறுதல் கூறினேன்” எனவும் ரஜினி தெரிவித்துள்ளார்.