வவுனியாவில் பரிந்துரை விருதுகளில் முறைகேடு!

வவுனியாவில் பரிந்துரை விருதுகளில் முறைகேடு!

வவுனியா நகரசபையின் கலாசார குழுவினரால் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே விருதுகள் வழங்கப்படவுள்ளதாகவும் பல கலைஞர்களுக்கு இவ்விடயம் குறித்து தெரிவிக்கப்படவில்லை அதற்கான நடவடிக்கை எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.

சிபாரிசுகளின் அடிப்படையில் விருதுகள் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் சார்ந்தும் மற்றும் தகுதிகள் அற்றவர்களுக்கும் விருதுகள் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி நகரசபை கலாசார மண்டபத்தில் 125 பேருக்கு விருதுகள் வழங்க ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக உள்ளூர் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

Aவவுனியா நகரசபையின் கலாசார குழுவினால் ”எழு நீ பண்பாட்டு முற்றம் விருது” வழங்கும் நிகழ்வில் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் எழு நீ விருதுகள் 12 துறைசார்ந்த 125பேருக்கு வழங்கப்படவுள்ளது.

குறித்த விருது வழங்கும் நிகழ்வில் பல முறைகேடுகள் நகரசபையின் கலாசார குழுவினரால் இடம்பெற்றுள்ளதுடன் அரசியல் சார்ந்தும் விருதுகள் பெறுவதற்கு தகுதியற்றவர்கள் எனப்பலரும் இவ்விருது வழங்குவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

எனவே நகரசபையின் கலாசார குழு இவ்வாறான தகுதியற்றவர்களுக்கும் அரசியல் சார்ந்தவர்களுக்கும் சிபாரிசு வழங்கி அவர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமைக்கு உள்ளூர் கலைஞர்கள் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் இதில் முறைகேடுகள் பலவும் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © 1243 Mukadu · All rights reserved · designed by Speed IT net