நாடாளுமன்றத்தை நாளை கூட்ட தீர்மானம்!
கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பினைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை நாளை (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.30இற்கு கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகரின் ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பிற்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, எதிர்வரும் 21ஆம் திகதிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் மீண்டும் கூடிய கட்சித் தலைவர்கள், நாளைய தினம் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்ட தீர்மானித்துள்ளனர்.