கன்னத்தில் கை வைத்து கலவரத்தை வேடிக்கை பார்த்த ரணில்!
பாராளுமன்ற அமர்வில் இன்று ஏற்பட்ட கைகலப்பு களேபரங்களுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சி பக்கத்தின் நான்காம் வரிசை ஆசனத்தில் அமர்ந்திருந்து கன்னத்தில் கை வைதுகொண்டு சிரித்தவாறு சம்பவங்களை வேடிக்கை பார்த்துகொண்டு இருந்துள்ளார்.
அத்துடன் அவ்வப்போது ரவி, சஜித்,சாகல எம்.பிக்கள் அவரிடம் காதில் ஏதேதோ கூறிக்கொண்டு அங்கும் இங்குமாய் ஓடித் திருந்தனர்.
இந்நிலையில் சபாபீடதுக்கு முன்பாக கைகலப்பு தொடங்கியவுடன் எதிர்க்கட்சி பக்கத்தில் முன்வரிசை ஆசனங்களில் அமர்ந்திருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாதுகாப்பு கருதி பின்வாங்கிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.