நம்பிக்கையில்லா பிரேரணை சட்டரீதியாயின் பதவி விலகுவேன்!

நம்பிக்கையில்லா பிரேரணை சட்டரீதியாயின் பதவி விலகுவேன்!

நாடாளுமன்றம் இன்றளவில் நாடக கூடமாக மாறிவிட்டதாகவும், சட்டரீதியான வகையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டிருக்குமாயின் பதவியை துறந்துவிட்டு செல்லத் தயார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (வௌ்ளிக்கிழமை) கசாகல விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது எதிர்ப்புகளை வௌிப்படுத்துவதில் எந்தவித பிரச்சினையும் இல்லை, எனினும், நாடாளுமன்றத்திற்கு கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் எடுத்து வரப்பட்டமை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இருந்த போதும் இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கையோ, ஒழுக்காற்று நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாவிட்டால், அதனை பொதுமக்களிடம் ஒப்படைக்குமாறு அவர் கோரியுள்ளார்.

அவ்வாறன்றி சட்டவிரோதமாக அவர்கள் செயற்படுவார்களால் தமது தரப்பினரும் உரிய வகையில் பதில் வழங்குவார்கள் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ எச்சரித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net