மாங்குளம் பொலிஸ் பிரிவில் முறிகண்டி பகுதியில் விபத்து – 11 வயது சிறுவன் படுகாயம்!
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் உள்ள முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில்11 வயது சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியிலிருந்து ஏ9 வீதி ஊடாக பயணிக்க முற்பட்ட முச்சக்கர வண்டி, ஏ9 வீதியில் யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காருடன் மோதியுள்ளது.
முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டிருந்த பிறேக் போதாமையால் வேக கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி காருடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் 11வயது சிறுவன் முச்சக்கர வண்டியில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த சிறுவன் கிளிநாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சைகள் இடம்பெற்ற வருகின்றதைாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்தவர்கள் எனவும், காயமடைந்தவரின் தந்தையே முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.