டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து சின்மயி நீக்கம்
டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியுள்ளதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
‘கடந்த 2 ஆண்டுகளாக சந்தா தொகை செலுத்தவில்லையென குற்றம் சுமத்தியே சங்கம் என்னை நீக்கியுள்ளது.
ஆனால் இவ்விடயம் தொடர்பில் எந்ததொரு முறையான அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. அந்தவகையில் 96 படம் தான் என்னுடைய கடைசி படமாக இருக்கலாம்” என சின்மயி டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.
சின்மயி ‘மீ டூ’ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து தனக்கும், சில பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக டுவிட்டரில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
மேலும் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரான நடிகர் ராதா ரவிக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த 2 பெண்களுக்கு, சின்மயி ஆதரவாக பேசினார்.
இதனால் தனது டப்பிங் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுமென டுவிட்டரில் ஏற்கனவே பதிவேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.