வவுனியா விபத்தில் பெண் உட்பட நால்வர் படுகாயம்!
வவுனியா, காத்தார்சின்னகுளம் பகுதியில் நேற்றிரவு மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு 7 மணியளவில் வவுனியா நகரிலிருந்து பூந்தோட்டம் காத்தார்சின்னகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் துவிச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவரும் துவிச்சக்கர வண்டியில் சென்ற பெண் உட்பட நால்வரும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் சென்றிருந்ததுடன் மூவரும் மதுபோதையில் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.