நாடாளுமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்!
நாடாளுமன்றின் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என நாடாளுமன்றிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றிற்குள் மீண்டும் குழப்பங்கள் ஏற்படாத வகையில் அனைத்து பொறுப்புக்களையும் ஏற்றுக்கொள்வதாக நாடாளுமன்ற பிரிவிற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சரத் குமார கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றிற்கு வழங்கப்படும் பொலிஸ் பாதுகாப்பு இன்றைய தினம் மேலும் பலப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் நாடாளுமன்றிற்குள் எந்தவொரு பொருளையும் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றிற்குள் மிளகாய் தூள், கத்தி போன்றன கொண்டு செல்லப்பட்டதாக கடும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.