அரசியல் நெருக்கடியினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் பின்னர் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை, நான் அந்த இடத்தில் இருந்து எனக்கு பெரும்பான்மையில்லாது போயிருந்தால் நன்றி கூறி விடைபெற்றிருப்பேன்.
ஆனால் இவர்கள் வீட்டுக்குச்செல்ல இப்படி தடுமாறுகின்றனர். இவர்கள் அனைவரும் ஆட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே முனைகின்றனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பொருளாதாரம் உள்ளிட்ட பாரிய சிரமங்களுக்கு சாதாரண மக்கள் முகங்கொடுத்துள்ளனர்“ என தெரிவித்துள்ளார்.