வெடி மருந்துகளுடன் இளைஞன் ஒருவர் கைது!
திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடி மருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் இளைஞரின் வீட்டை சோதனையிட்டபோது டி. என். டி என்றழைக்கப்படுகின்ற 929 கிராம் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர் சாம்பல் தீவு, ஆத்தி மோட்டை, ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜேசுதாசன் ஸ்டீவன் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞரை திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், வெடிபொருட்களுடன் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாகவும், இன்று திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில், முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.