இடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுகின்றது!
இடைக்கால கணக்கு அறிக்கை தற்போது தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “டிசம்பர் 31 ஆம் திகதி வரை அரசாங்கத்தின் செலவுகள் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.
சிலவேளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு ஏற்ப அடுத்து வரும் நாட்களுக்கான செலவுகள் இடம்பெறும்.
அந்த செலவுகளுக்கு தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் புதிய அரசாங்கத்தின் நாடாளுமன்றம் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்படும்“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.