சீனா இரட்டை வழிநடத்தல் செய்மதிகளை விண்ணுக்கு செலுத்தியது!
சீனா இரண்டு புதிய செய்மதிகளை தனது பீய்டோ வழிநடத்தல் செயற்கைகோள் கட்டமைப்பை நோக்கி செலுத்தியுள்ளது.
(திங்கட்கிழமை) அதிகாலை லோங் மார்ச்-3பி செய்மதி காவி உந்துகணை மூலம் தென்மேற்கு சீனாவில் உள்ள ஷிஷாங் விண்வௌி ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு செலுத்தப்பட்டது.
குறித்த செய்மதிகள் புவியின் நடுத்தர சுற்றுப்பாதையில் மூன்று மணித்தியால பயணத்தின் பின்னர் நிலைநிறுத்தப்பட்டது.
ஏற்கனவே சுற்றுப்பாதையில் செயற்பட்டு வருகின்ற பி.டி.எஸ்-3 வகையான 17 செயற்கை கோள் கட்டமைப்புகளுடன், புதிய செய்மதிகளும் இணைந்து செயற்படவுள்ளன.
அதன்படி, இவை 42 வது மற்றும் 43 வது செய்மதிகளாக பி.டி.எஸ் செய்மதி குடுபத்துடன் இணைந்து கொள்கின்றன.
இதுபற்றி பி.டி.எஸ்-3 செய்மதிய வடிவமைப்பு திட்டத்தின் பிரதித் தலைமை வடிவமைப்பாளர் ஷி ஜூன் கூறுகையில், “செய்மதி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பின், கட்டமைப்பின் தரை மற்றும் விண்வெளி சோதனைகளை நாங்கள் நடத்துவோம்.
அதன்பின்னர் உத்தியோகபூர்வமாக வழிநடத்தல் சேவைகளை வழங்க முடியும், சீனாவின் அங்கத்துவர்களாக இருக்கின்ற பிராந்தியங்கள் மற்றும் சர்வதேச ரீதியாக பயன்பாடுகளை பெற முடியும்” என்று தெரிவித்தார்.
வெற்றிகரமான விண்வௌி செலுத்துகை மூலம், அடிப்படை BDS செய்மதி வரிசைப்படுத்தல் முழுமை பெற்றது.
இந்த செயற்கை கோள் கட்டமைப்பின் ஊடாக இந்த வருட இறுதிக்குள் பங்காளி நாடுகளுக்கு நெவிகேஷன் எனப்படும் வழிநடத்தல் சேவைகளை வழங்க சீனா எதிர்பார்த்துள்ளது. இதன்முழுமையான சர்தேச பணிகளை 2020 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்கு சீனா எதிர்பார்த்துள்ளது.