கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவில் பெசில் ராஜபக்ஸவின் இல்லத்திற்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
என்ன காரணத்திற்காக அமெரிக்காவில் அமைந்துள்ள பெசில் ராஜபக்ஸவின் இல்லத்திற்கு இரண்டு இலங்கை இராணுவ வீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறித்து கோதபாய ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பில் விசாரணை நடாத்த எதிர்வரும் 9ம் திகதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, விமானப்படைக்க சொந்தமான விமானங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து நாமல் ராஜபக்ஸவிடம் எதிர்வரும் 10ம் திகதி விசாரணை நடத்தப்பட உள்ளது.
குளோபல் தமிழ்