நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
பல சர்சைகளுக்கு மத்தியில் மீண்டும் நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகின்றது.
குறித்த நாடாளுமன்ற அமர்வின் போது ஆளும் கட்சிக்கா? அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கா? அங்கத்துவம் வழங்கப்பட வேண்டுமென்ற சர்ச்சை ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவுக்குழு நியமனமும் நடைபெறவுள்ளது.
இதேவேளை இன்று காலை 9 மணியளவில் சபாநாயகர் கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதில் தெரிவுக்குழு தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.