ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் விசேட அமர்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பேசவுள்ளார். எதிர்வரும் 10 மற்றும் 11ம் திகதிகளில் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இந்த அமர்வு நடைபெறவுள்ளது.
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்து அமர்வில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்கத்தின் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து சந்திரிக்கா உரையாற்றவுள்ளார்.