12 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!
நிலவும் மழையுடனான வானிலையால் 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வௌ தெரிவித்துள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மழையுடன் கூடிய வானிலை தொடர்வதால் மட்டக்களப்பு, அநுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள நுவரவௌ, மஹவிலச்சிய, இராஜாங்கனை, மஹகனதராவ, பதகிரிய ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தெபரவௌ, தெதுறு ஓயா, முருதவெல, திஸ்ஸவௌ, வீரவில ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்த நீர்த்தேக்கங்களுக்கு அருகில் தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது என்றார்.