“பெரும்பான்மையை வெளிப்படுத்தி விரைவில் பதிலடி கொடுப்போம்”
பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் பெரும்பான்மையினை விரைவில் வெளிப்படுத்தி எதிர் தரப்பினருக்கு தக்க பதிலடியினை வழங்குவோம் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்றத்தில் தற்போது காணப்படுகின்ற அரசியல் நெருக்கடிகளுக்கு பாராளுமன்ற தேர்தலின் ஊடாக மாத்திரமே தீர்வினைகாண முடியும்.
ஆனால் எதிர்தரப்பினர் அதற்கும் தடையாகவே செயற்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.