பொலிஸ் உயர் அதிகாரிகளை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் உயர் அதிகாரிகளை இன்று அவசரமாக சந்திக்கவுள்ளார்.
அதற்காக பொலிஸ்மா அதிபர், அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர்களை இன்று நண்பகல் 12.00 மணிக்கு கோட்டை ஜனாதிபதி செயலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.
இந்த அவசர சந்திப்புக்கான காரணம், எந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கும் தெரிவிக்கப்படாதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் மீளவும் கொண்டுவரப்பட்ட பின்னர் பொலிஸாரின் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் உள்ளிட்ட காரணிகள் குறித்து கலந்துரையாடவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.