பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாடு தழுவிய ரீதியில் போராட்டம்!
சம்பள உயர்வை வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டமொன்றை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கவுள்ளனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று நடத்தப்படவுள்ளது.
இப்போராட்டத்திற்கு, தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவிப்பதாக அச்சங்கத்தின் நிர்வாக செயலாளர் உருத்திர தீபன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிதி அமைச்சுக்கும் பெருந்தோட்ட துரைமார் சம்மேளனத்திற்கும் மற்றும் தொழில் அமைச்சிற்கும் இடையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடலொன்றும் இன்று நடைபெறவுள்ளது.
இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அழுத்தமொன்றை பிரயோகிப்பதற்காகவே அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.